Loading . . .




டென்ஷனான மாணிக்கம் தாகூர்

The Congress Calls 1 month ago National Buzz

விஜய் முதல்வராக காரணமே நாங்கதான்.. இல்லனா அமித்ஷா கதையை முடித்திருப்பார்

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி கடிதம் கொடுக்கவில்லை என்றால், அமித்ஷா கதையை முடித்திருப்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விஜய் முதல்வராகவும், தவெகவினர் அமைச்சராகவும் முதலில் கடிதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று கூறிய மாணிக்கம் தாகூர், தவெகவுக்கு எம்பிக்கள் இல்லாததால் இந்தியா கூட்டணியில் சேரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், தவெகவில் எம்பி உருவாகிவிட்டால், அப்போது அந்த கட்சியை இந்தியா கூட்டணியில் இணைத்து கொள்வோம். எம்பி இல்லாதவர்களை நாங்கள் கூட்டணிக்கு வாங்க வாங்க என்று சொல்லி கொண்டிருக்க முடியாது. எம்பி-க்கள் இருந்தால் மட்டுமே எம்பிக்கள் இருப்பதுதான் என்றார்.


0 Comments

Post your comment here

National Buzz Relateted News